பழநி: பழநி மலை கோயில் நிர்வாகத்தின் மலைக்கோயில் நவராத்திரி விழா முன்னிட்டு நாளை மதியம் 12:00 மணி வரை மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.
பழநி மலைக்கோயில் நிர்வாகத்தின் சார்பில் முருகன் கோயிலில் செப்., 26 காப்பு கட்டுதல் உடன் நவராத்திரி விழா துவங்கியது. நாளை( அக்., 4ல்) மலைக்கோயிலில் உச்சிக்கால பூஜை மதியம் 12:00 மணிக்கும்,சாயரட்சை பூஜை மதியம் 1:30 மணிக்கும் நடைபெறும். எனவே மலைக் கோயிலில் காலை 11:00 மணி அளவில் கட்டண சீட்டுகள் வழங்குவது நிறுத்தப்படும். மதியம் 2:45 மணிக்கு பராசத்தி வேல் புறப்பட்டுன மலைக்கோயில் சன்னதி திருக்காப்பிடப்படும். எனவே பீச் ரோடு மற்றும் படிப்பாதை வழியாக மதியம் 12:00 மணிக்கு மேல் பக்தர்கள் மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. பெரிய நாயகி அம்மன் கோயிலில் இருந்து வேலுடன் தங்க குதிரை வாகனத்தில் முத்துகுமாரசுவாமி எழுந்தருளி கோதைமங்களத்தில் அம்பு போடுதல் எனும் மகிசாசூரன் வதம், நடைபெறும். அதன்பின் பராசக்தி வேல் மலைக்கோயில் அடைந்த பின் அர்த்த சாம பூஜை நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகள் இணை ஆணையர் நடராஜன் தலைமையில் நடைபெறும்.