திண்டிவனம்: ஒலக்கூர் முத்தாலம்மன் கோவிலில் அமைக்கப்பட்டுள்ள மெகா சைஸ் கொலு பக்தர்களை கவர்ந்து வருகிறது.
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த ஒலக்கூரில் உள்ள முத்தாலம்மன், கோவிலில் ஐந்தாம் ஆண்டு நவராத்திரி விழா பத்து நாட்களுக்கு நடந்து வருகிறது. அதையொட்டி, ஒவ்வொரு நாளும் பராசக்தி, துர்க்கை, அர்த்தநாரீஸ்வரர், மகாலட்சுமி, சந்தான லட்சுமி, ஆண்டாள், விசாலாட்சி, சரஸ்வதி ஆகிய தெய்வ நிலைகளில் முத்தாலம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். மேலும், கோவில் உட்புற வளாகத்தில் 6அடி உயரம், 50 அடி நீளத்தில் மெகா சைஸ் கொலு படிகள் அமைத்து ஏராளமான சுவாமி சிலைகள் கொலுவில் காட்சிப் படுத்தப்பட்டுள்ளது. மாலையில் கொலு பூஜைகள் முடிந்து ஆயிரம் பேருக்கு பிரசாதம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.