பதிவு செய்த நாள்
04
அக்
2022
09:10
சென்னை- விஜயதசமி திருநாள், வித்யாரம்பத்துக்கு உகந்த நாள். நாளை விஜயதசமி கொண்டாடப்படுகிறது.
மேலும், பரதநாட்டிய கலைஞர் ஷீலா உன்னிகிருஷ்ணன், விஞ்ஞானி டி.வி.வெங்கடேஸ்வரன், ஓய்வு பெற்ற டி.ஜி.பி., - எம்.ரவி, நாடக கலைஞர் டி.வி.வரதராஜன், தமிழ் கிராமிய நாட்டுப்புற பாடகர் அனிதா குப்புசாமி ஆகியோரும் பங்கேற்கின்றனர்.எவர்வின் குழும பள்ளிகள் புருஷோத்தமன், சென்னை விமான நிலைய டி.ஐ.ஜி., - கே.வி.கே.ஸ்ரீராம், ஆன்மிக சொற்பொழிவாளர் தாமல் ராமகிருஷ்ணன், டாக்டர் இந்திராணி சுரேஷ், ஆன்மிக சொற்பொழிவாளர் ஜே.சீதாராமன் உட்பட கல்வியாளர்கள் பலர் பங்கேற்று, நிகழ்ச்சியை சிறப்பிக்க உள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் இரண்டரை வயது முதல் மூன்றரை வயதுள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். காலை 8:30 மணி முதல் 10:30 மணி வரை நடக்கும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க, அனுமதி இலவசம்; முன்பதிவு அவசியம். இதுவரை பதிவு செய்யாதவர்களும் குழந்தையின் பெயர், பெற்றோர் பெயர், முழு முகவரி, மொபைல் எண் விபரங்களை, பங்கேற்க விரும்பும் பகுதிக்கென குறிப்பிட்டுள்ள மொபைல் எண்ணுக்கு, வாட்ஸ் ஆப் அனுப்பி பதிவு செய்யலாம்.மழலைகள் அரிச்சுவடி எழுதிய உடன், அவர்களின் புகைப்படத்துடன் கூடிய, தினமலர் நாளிதழின் சான்றிதழ் வழங்கப்படும். அனைத்து குழந்தைகளுக்கும் அழகிய பை, ஓவிய புத்தகம், கலர் பென்சில் என, எல்.கே.ஜி., படிப்புக்கு தேவையானவை அடங்கிய தொகுப்பு பரிசாக வழங்கப்படும். இந்நிகழ்ச்சியை தினமலர் நாளிதழுடன் இணைந்து எவர்வின் கல்வி குழுமம், ஆவின் நிறுவனம் நடத்துகின்றன.நிகழ்ச்சி நடக்கும் இடங்கள் பதிவு செய்ய வேண்டிய மொபைல் எண்
வடபழநி: அருள்மிகு வடபழநி ஆண்டவர் கோவில், வடபழநி, சென்னை - 26 99443 09681பெரம்பூர்: எவர்வின் வித்யாஷ்ரம், 32/ 134 பெரம்பூர் நெடுஞ்சாலை, பெரம்பூர், சென்னை - 12 98843 91342தாம்பரம்: ஸ்ரீசங்கர வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, 39, வேளச்சேரி மெயின் ரோடு, சென்னை - 59 97511 36644