நவராத்திரி விழா யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் செப்., 25ல் பர்வதவர்த்தினி அம்மனுக்கு காப்பு கட்டி விழா துவங்கியது. இதனைதொடர்ந்து கோயிலில் தொடர்ந்து 9 நாட்கள் பர்வதவர்த்தினி அம்மனுக்கு பல அவதாரத்தில் அலங்கரித்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். நேற்று விஜயதசமி யொட்டி கோயிலில் இருந்து தங்க கேடயத்தில் பர்வதவர்த்தினி அம்மன் புறப்பாடாகி வன்னி நோன்பு திடலில் எழுந்தருளினார். பின் இரவு 7 மணிக்கு அம்மன் அம்பு எய்து மகிசாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியை கோயில் குருக்கள் உதயகுமார் செய்தார். பின் அம்மனுக்கு மகா தீபாராதனை நடந்தது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.