கமுதி: கமுதி அருகே நரசிங்கம்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோயில் புரட்டாசி பொங்கல் விழா முன்னிட்டு கடந்த 15 நாட்களுக்கு முன்பு கிராமமக்கள் காப்புகட்டி விரதம் இருந்து வந்தனர். தினந்தோறும் பெண்கள் கும்மியடித்தும், ஆண்கள் ஒயிலாட்டம் ஆடியும் வந்தனர். இதனை முன்னிட்டு கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் அக்கினிசட்டி, பால்குடம் எடுத்து கிராமத்தின் முக்கிய விதிகளில் ஊர்வலமாக காளியம்மன் கோயிலுக்கு வந்தனர். பின்பு அம்மனுக்கு பால்,சந்தனம் உட்பட 16 வகையான அபிஷேகம் நடந்தது. கிராமமக்கள் பொங்கல் வைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். முளைக்கட்டு திண்ணையில் இருந்து முளைப்பாரி தூக்கி ஊர்வலமாக சென்று குண்டாறு வரத்து கால்வாயில் கரைத்தனர்.