பதிவு செய்த நாள்
09
அக்
2022
07:10
ஈரோடு : சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப்பகுதியையொட்டி அமைந்துள்ளது கம்பத்ராயன் கிரி. இக்கோவிலானது மலைஉச்சியில் அவ்வளவுஎளிதாக யாரும் செல்லமுடியாத வண்ணம் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளது. புரட்டாசி மாதத்தில் மட்டுமே இங்கு சிறப்புபூஜைகள் நடைபெறுவது வழக்கம் புரட்டாசி மாதம் சனிக்கிழமைகளில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவர் இன்று3வது சனிக்கிழமை பக்தர்கள் காலைமுதலே நடைபயணமாகவும்,டூவீலர்களிலும், சென்று மலைஅடிவாரத்தில் நிறுத்திவிட்டு கால்நடையாக குழந்தைகள்முதல் பெரியவர்கள் வரை ஆர்வமாக பக்திபரவசத்துடன் பெருமாளை பக்தர்கள் மலைஏறி தரிசனம செய்தனர்.
இம்மலைக்கு 2வழியாக செல்லலாம் சத்தியிலிருந்து புளியங்கோம்பை வழியாக சென்றால் 6மலைகளை கடந்து செல்லவேண்டும் கடம்பூர் வழியாக செல்லவேண்டுமெனில் 3மலைகளை செங்குத்தாக ஏறவேண்டும் கொஞ்சம் தடுமாறினாலும் ஆபத்துதான் பக்தர்களின் பாதுகாப்பை கருதி வனத்துறை மூலம் சோதனை மேற்கொண்ட பின்அனுமதிக்கப்பட்டனர். மேலும் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே காணப்பட்டது. மேலும் மலையில் தங்குவதற்காக கூடாரம் அமைக்க தார்பாய்கள் கொண்டு சென்றவர்களிடமிருந்து வனத்துறையினர் தார்பாயை வாங்கி கொண்டனர். கோவிலை விட்டு வேறு இடத்திற்கு தனியாக செல்லவேண்டாமென அறிவுறுத்தப்பட்டது. பக்தர்கள் தங்கள்வேண்டியது நிறைவேறியதற்கு காணிக்கையாக 5அடி 10அடி மற்றும் அதற்குமேலும் வேல்கம்பு செய்து மலைஉச்சியிலுள்ள கோவிலில் நடப்பட்டும் நல்லெண்ணெய் தேங்காய் பழம் மற்றும் தீபங்களை ஏற்றி வழிபட்டனர். புலிகள் காப்பக பகுதி என்பதால் வழிபாடு செய்யலாம், இரவு தங்க கூடாது. பக்தர்கள்தங்களுக்கு தேவையான உணவுபொருட்களை தலைசுமையாக,எடுத்துகொண்டு கோவிந்தா கோவிந்தா என முழங்கிசென்றனர் இக்கோவிலுக்கு சத்தியமங்கலம் சுற்றுவட்டார பகுதிகளான கே.என்.பாளையம், கெம்பநாயக்கன்பாளையம், ராமபையலூர்,கெஞ்சனூர், வடக்குபேட்டை, அரியப்பம்பாளையம், காசிகாடு, தாண்டாம்பாளையம், வடவள்ளி, தாசரிபாளையம், புளியங்கோம்பை, மற்றும் டி.என்.பாளையம் சுற்றுவட்டார பகுதிகளான வாணிபுத்தூர் கொங்கர்பளையம் கள்ளிபட்டி,கடம்பூர் மலைப்பகுதி கிராமங்களான லஞ்சி,கானக்குந்துார்,கரளியம்,அத்தியூர்,குன்றி,எக்கத்துார்,பத்திரிபடுகை,உள்ளிட்டபகுதிகளிலிருந்தும் பக்தர்கள் 5000க்கும் மேற்பட்டோர் தரிசனம் செய்தனர்.சத்தியமங்கலம் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.