பதிவு செய்த நாள்
13
அக்
2022
07:10
திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா கொடியேற்றம் காந்திமதி அம்பாள் சன்னதியில் நடந்தது. நெல்லையப்பர் கோயிலில் ஐப்பசி திருக்கல்யாண திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது.
காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் கொடியேற்றம் நடந்தது. முன்னதாக கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். வரும் 26ம் தேதி வரை தினமும் காலை 7 மணி, இரவு 6 மணிக்கு காந்திமதி அம்பாள் டவுன் 4 ரதவீதியிலும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா நடக்கிறது. 21ம் தேதி இரவு 1 மணிக்கு காந்திமதி அம்பாள் ன்னதியில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட சப்பரத்தில் காந்திமதி அம்பாள் புறப்பட்டு, கீழரதவீதி, ற்கு ரதவீதி, பேட்டை ரோடு வழியாக அதிகாலை 5 மணிக்கு கம்பை நதி காமாட்சி அம்பாள் கோயிலை சென்றடைதல் நடக்கிறது. 22ம் தி மதியம் 12மணிக்கு மேல் ஒரு மணிக்குள் கம்பை நதி காமாட்சி அம்பாள் காட்சி மண்டபத்தில் சுவாமி, அம்பாள் காட்சி கொடுத்தருளல், மாலை 4.30 மணிக்கு சுவாமி, அம்பாள் வீதியுலா எழுந்தருளல் நடக்கிறது. 23ம் தி திருக்கல்யாண திருவிழா அம்மன் சன்னதி ஆயிரங்கால் மண்டபத்தில் மாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் நடக்கிறது. தொடர்ந்து காலை 9.30 மணிக்கு சுவாமி, அம்பாள் பட்டணப் பிரவேசம் 4 ரதவீதிகளிலும் நடக்கிறது. 23ம் தேதி முதல் 25ம்தேதி வரை அம்மன் கோயில் ஊஞ்சல் மண்டபத்தில் அம்பாள் ஊஞ்சல் விழா நடக்கிறது. 26ம் தி சுவாமி, அம்பாள் ரிஷப வாகனத்தில் மறுவீடு பட்டணப் பிரவேசம் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோயில் நிர்வாகம் மற்றும் கட்டளைதாரர்கள் செய்துள்ளனர்.