காட்டில் வாழும் நரி ஒன்று சேவல் மட்டுமே உணவாக கிடைக்கிறது என வருத்தப்பட்டது. ஒருநாள் ‘‘ஆட்டினை வேட்டையாட கற்றுக் கொடு’’ என ஓநாயிடம் உதவி கேட்டது. அதுவும் அவ்வாறே செய்தது. ஒருநாள் ஆட்டு மந்தைக்குள் ஒநாயின் தோலை போர்த்திக்கொண்டு நுழைந்த நரி, ஆட்டின் கழுத்தை கவ்வியது. அந்த நேரம் பார்த்து சேவல் ஒன்று கூவ... ஆட்டை விட்டு விட்டு சேவலை பிடிக்கச் செல்ல அதுவும் பறந்தது. இந்த சமயத்தில் ஆடும் தப்பித்தது. பேராசையால் இரண்டையும் தவற விட்டோமே என வருந்தியது நரி.