அக்கிரமேசி வாலேஸ்வரி அம்மன் கோயிலில் மண்டல அபிஷேகம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
24அக் 2022 05:10
நயினார்கோவில்: பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் ஒன்றியம் அக்கிரமேசி கிராமத்தில் அமைந்துள்ள, வாலேஸ்வரி அம்மன் கோயில் மண்டல அபிஷேக விழா நடந்தது.
கோயிலில் செப்டம்பர் 5ஆம் தேதி மகா கும்பாபிஷேக விழா நடந்தது தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடத்தப்பட்டது. நேற்று மண்டலபிஷேகத்தையொட்டி, 108 கலச அபிஷேகம் மற்றும் யாக பூஜைகள் நிறைவடைந்து, மகா பூர்ணாகுதி நடந்தது. பின்னர் பால், இளநீர், கலச புனித நீர் என பல்வேறு வகையான அபிஷேக ஆராதனைகள் நடந்தன. தொடர்ந்து சோனையா, கருப்பணசாமி, இருளன், ராக்காச்சி அம்மன் என பரிவார தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகத்திற்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.