காரைக்கால்: காரைக்கால் பாரதியார்சாலையில் உள்ள அம்மையார் கோவிலில் நேற்று தீபாவளி நோன்பு வழிபாட்டில் பக்தர்கள் ஈடுப்பட்டனர்.
காரைக்கால் மாவட்டத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நேற்று பொதுமக்கள் புத்தாடை, பட்டாசு. இனிப்பு மற்றும் மும்மாதத்தில் வாழ்த்துகள் பறிமாறிக்கொண்டனர். பின் பல்வேறு கோவிலுக்கு குடும்பத்துடன் சென்று சாமி தரிசனம் செய்தனர்.பின் சுற்றுலாத்தலம். உறவினர்கள் வீடுகளுக்க சென்று குடும்பத்துடன் தீபாவளி பண்டிகை கொண்டாடினர்.பின் ஸ்ரீ கேதார கௌரி தீபாவளி நோன்பு வழிபாடு பக்தர்கள் ஈடுப்பட்டனர். இன்று அமாவாசை என்பதால் காரைக்கால் பாரதியார் சாலையில் உள்ள அம்மையார் கோவிலில் தேங்காய்.பூ.பழம்,நோன்பு கயிறு உள்ளிட்ட பொருட்கள் கொண்டு பக்தர்கள் தீபாவளி நோன்பு வழிப்பாட்டனர்.இதில் காரைக்கால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிருந்து 200க்கு மேற்பட்ட பக்தர்கள் பலர் கலந்துகொண்டு வழிப்பட்டனர்.