கந்த சஷ்டி விழா போடி முருகன் கோயிலில் திருக்கல்யாணம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2022 03:11
போடி: போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி முருகப்பெருமான் வள்ளி, தெய்வானைக்கும் திருக்கல்யாணம் நேற்று கோலாகலமாக நடந்தது.
போடி சுப்பிரமணியர் சுவாமி கோயிலில் கந்த சஷ்டி 7ம் நாள் விழாவை முன்னிட்டு நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, மாலை மாற்றுதல், மாங்கல்ய பூஜையும், வள்ளி, தெய்வானையுடன் தேவசேனா சுப்ரமணிய சுவாமி திருக்கல்யாணம் தக்கார் ராமதிலகம் தலைமையில் நடந்தது. அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் தரிசனம் பெற்றனர். முருகன் கந்த சஷ்டி திருக்கல்யாண அறக்கட்டளை சார்பில் கவுரவ தலைவர் முருகன் தலைமையில் அன்னதானம் நடந்தது. தலைவர் செண்பகராஜ், துணைத்தலைவர் கண்ணபிரான், துணை செயலாளர்கள் குணசேகரன், சுப்ரமணியன், பொருளாளர் முருகவேல், ஆலோசகர்கள் காமாட்சி, ராமகிருஷ்ணன், நிர்வாகஸ்தர்கள் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.