முறிந்த தடுப்பு கம்புகள் பக்தருக்கு ஆபத்து : அமைச்சர் கண்டிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01நவ 2022 05:11
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் முறிந்த தடுப்பு வேலி கம்புகளால் பக்தர்களுக்கு ஆபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை அமைச்சர் சேகர் பாபு சுட்டிக்காட்டி அதிகாரியை கண்டித்தார்.
நேற்று ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் அமைச்சர் சேகர்பாபு ஆய்வு செய்த போது, பொது தரிசனத்திற்கு 3ம் பிரகாரத்தில் கம்பு வேலிக்குள் ஏராளமான பக்தர்கள் காத்திருந்தனர். அங்கு உடைந்து கூர்மையாக இருந்த கம்புகளை பக்தர்கள் கடந்து வருவதை அமைச்சர் கண்டார். இதனை ஏன் இப்படி வைத்திருக்கிறீர்கள், புதிய கம்பு பொருத்தி இருக்கலாமே. இதனால் பக்தர்களுக்கு விபரீதம் ஏற்படும் அபாயம் உள்ளது எனக் கூறினார். மேலும் பக்தர்கள் புனித நீராடும் வழித்தடத்தில் பல இடங்களில் டைல்ஸ் கல்கள் உடைந்தும், பாசி படிந்தும் கிடந்தது. இதனை கண்ட அமைச்சர், இதனுள் பக்தர்கள் வழுக்கி விழுந்தால் காயம் அடைவார்கள். புதிய டைல்ஸ் கல்கள் அமைத்து இருக்க கூடாதா, கோயிலுக்குள் சுகாதாரம் படுமோசமாக ஏன் வைத்திருக்கிறீர்கள் எனக் கூறி அதிகாரிகளை அமைச்சர் கண்டித்தார்.