பழநி: பழநி ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளை முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் மலைக் கோயிலுக்கு வந்தனர். பழநியில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளை முன்னிட்டு வெளி மாவட்ட, மாநிலத்திலிருந்து வந்தனர். இதனால் பழநி மலைக்கோயில், அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி, பஸ் ஸ்டாண்ட் உள்ளிட்ட பகுதிகளில் அதிக அளவில் கூட்டம் இருந்தது. வின்ச், ரோப் கார் வரிசையிலும் கூட்டம் அதிகளவில் இருந்தது. பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்தனர்.