அவிட்டம் 3, 4 யாருடைய அதிகாரத்துக்கும் கட்டுப்பட விரும்பாத உங்களுக்கு இந்த மாதம் எல்லா நன்மையும் உண்டாகும். எதையும் செய்து முடிக்கும் துணிச்சல் பிறக்கும். எதிலும் வெற்றியும் சந்தோஷமும் ஏற்படும். பணம் வரவு அதிகரிக்கும். எதிர்ப்பு அகலும். நீண்ட நாளாக இருந்த பிரச்னைகளில் தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் குதுாகலம் உண்டாகும். உங்களது பேச்சுக்கு மதிப்பு கூடும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதை கழிப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் லாபம் உண்டாகும். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். பணியாளர்கள் முன்னேற்றம் காண்பார்கள். மேலதிகாரிகளால் நன்மை ஏற்படும். பெண்கள் துணிச்சலான முடிவுகளால் வெற்றி காண்பர். எதிர்ப்புகள் விலகும். கலைத்துறையினருக்கு உங்கள் கவுரவம் உயரும். விரும்பிய பதவி கிடைக்கும். வழக்கு, விவகாரங்கள் சாதகமாக அமையும். அரசியல்வாதிகளுக்கு புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். சிலருக்கு திறமைக்கேற்ப புகழ் பாராட்டு கிடைக்காமல் போமும். மாணவர்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் சாதகமாக நடக்கும். பரிகாரம்: அனுமனை வணங்க வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும். சந்திராஷ்டமம்:நவ. 17, 18, டிச. 15 அதிர்ஷ்ட நாள்: நவ. 26, 27
சதயம் தன்னலம் கருதாமல் பிறருக்கு உதவி செய்வீர்கள். அறிவுத் திறமை கூடும். நீண்ட நாளாக இருந்த பிரச்னை தீரும். இனிமையான பேச்சால் நன்மையடைவீர்கள். மற்றவர் செய்கையால் கோபம் ஏற்படலாம். நிதானம் தேவை. பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்னை குறையும். அதன் மூலம் வருமானம் கிடைக்கும். பிள்ளைகள் ஒற்றுமையுடன் இருப்பர். புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். வெளியூரில் இருந்து நல்ல தகவல் வரும். கணவன், மனைவிக்கிடையே எதையும் மனம் விட்டு பேசி அதன் பிறகு செய்வது நன்மை தரும். குடும்பத்தில் அமைதி உண்டாக கோபத்தை குறைப்பது நல்லது. தொழில், வியாபாரம் எதிர்பார்த்த அளவு லாபம் தராவிட்டாலும் வருமானத்திற்கு குறைவு இருக்காது. தொழில் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தள்ளி போடுவது நல்லது. பணியாளர்கள் பணியில் மட்டும் கவனம் செலுத்துவது நல்லது. பெண்கள் அறிவுபூர்வமாக செயல்பட்டு சில முக்கிய முடிவுகளை எடுப்பர். நீண்ட நாளாக இழுபறியாக இருந்த காரியம் நிறைவேறும். கலைத்துறையினருக்கு முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும். அரசியல்வாதிகளுக்கு பயணத்தின் போது கவனம் தேவை. வாழ்க்கை தரம் உயரும். மாணவர்கள் மேல் படிப்பு பற்றிய சிந்தனையில் ஈடுபடுவர். சக மாணவர்களின் விவகாரங்களில் தலையிட வேண்டாம். பரிகாரம்: நாகதேவதையை வணங்க காரிய வெற்றி உண்டாகும். சந்திராஷ்டமம்: நவ.18, 19 அதிர்ஷ்ட நாள்: நவ.27, 28
பூரட்டாதி 1, 2, 3: எதிர்காலத்தை மனதில் கொண்டு உற்சாகமாக செயல்படுவீர்கள். உங்களுக்கு இந்த மாதம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். அனைத்து விதமான நலங்களையும் பெறப் போகிறீர்கள். தனாதிபதி குருவின் இருப்பால் சுப நிகழ்ச்சிகளுக்கு பஞ்சமிருக்கது. விருந்து நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். இடமாற்றம் ஏற்படும். எடுத்த காரியம் தாமதப்படுகிறதே என்ற கவலை உண்டாகும். இரவில் நீண்ட நேரம் கண் விழிக்க வேண்டி வரலாம். குடும்பத்தில் இருப்பவர்களால் இருந்த வருத்தம் நீங்கும். வாழ்க்கைத் துணையின் உடல்நலனில் அக்கறை தேவை. வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதன் மூலம் செலவு கூடும். விருந்தினர் வருகை இருக்கும். புதிய முடிவுகள் எடுப்பதில் தயக்கம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படலாம். பிள்ளைகள் வழியில் செலவு உண்டாகும். பணவிஷயத்தில் கவனமாக இருப்பது நல்லது. தொழில், வியாபாரம் எதிர்பார்த்ததை விட அதிகமான லாபம் தரும். நிர்வாகச் செலவும் கூடும். பணியாளர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கை தேவை. பெண்கள் திடீர் பயணங்கள் செல்ல நேரிடலாம். கலைத்துறையினருக்கு வளர்ச்சிக்கான காலகட்டம் இது. அரசியல்வாதிகளுக்கு நன்மை தீமை என கலந்து நடக்கும். மாணவர்கள் அன்றாடம் படிக்கும் நேரத்தை அதிகப்படுத்துவது நல்லது. பரிகாரம்: பிரதோஷத்தன்று நந்தி தரிசனம் செய்வது நல்லது. சந்திராஷ்டமம்: நவ.19, 20 அதிர்ஷ்ட நாள்: நவ.28, 29
மேலும்
பங்குனி ராசி பலன் (15.3.2025 முதல் 13.4.2025 வரை) »