பூரட்டாதி 4 இந்த மாதம் புதிய முயற்சிகள் வெற்றி பெறும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல்நலம் மேம்படும். மனதில் தைரியம் கூடும். தன்னம்பிக்கை உண்டாகும். எதிர்பாராத திருப்பம் ஏற்படும். தொழில், வியாபாரத்தில் வளர்ச்சிக்கான வாய்ப்பு கிடைக்கும். வியாபாரம் தொடர்பான நிர்வாகச் செலவு கூடும். பணியாளர்களுக்கு செயல்திறன் அதிகரிக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். குடும்பத்தில் சந்தோஷம் உண்டாகும். பிரிந்து சென்ற குடும்பத்தினர் மீண்டும் வந்து சேருவர். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு நீங்கும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உறவினர் மத்தியில் மரியாதை கூடும். பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகும். கலைத்துறையினருக்கு வருமானம் அதிகரிக்கும். கருத்துக்களை பரிமாறும் முன் பொறுமை நிதானம் அவசியம் என்பதை உணருங்கள். புதிதாக வீடு, மனை வாங்கும் எண்ணம் ஈடேறும். அரசியல்வாதிகளுக்கு விருப்பமான நண்பர்களை விட்டுப் பிரிய நேரலாம். பயணத்தின் போது பொருட்களை பாதுகாப்பது அவசியம். மாணவர்களுக்கு கல்வியில் திருப்தியான நிலை காணப்படும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். பரிகாரம்: சரஸ்வதி தேவியை வணங்க வெற்றி உண்டாகும். சந்திராஷ்டமம்: நவ.19, 20 அதிர்ஷ்ட நாள்: நவ.28, 29
உத்திரட்டாதி நினைத்ததை செய்து முடிக்கும் சூழ்நிலை உருவாகும். பணவசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். அதிருப்தி நீங்கி வாழ்வில் பிடிப்பு உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். இடமாற்றம் ஏற்படலாம். தொழில், வியாபாரத்தில் திடீர் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். புதிய ஆர்டர்களுக்காக கூடுதலாக அலைய நேரிடும். பணியாளர்கள் கடுமையாக உழைக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் பிரச்னை தலை துாக்கலாம். உங்களது கருத்துக்கு மாற்று கருத்து உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையே விட்டுக்கொடுத்து நடப்பது நன்மை தரும். பெண்களுக்கு மனதில் இருந்த சோர்வு நீங்கி உற்சாகம் உண்டாகும். எதிர்பார்த்த தகவல் வரும். பணவரவு கூடும். கலைத்துறையினர் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கப் பெறுவர். பிறமொழி பேசுபவர்கள் மூலம் உதவி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு வீண் அலைச்சல் இருக்கும். கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியாமல் திண்டாடுவர். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் உண்டாகும். பரிகாரம்: நவக்கிரக வழிபாடு நன்மையளிக்கும். சந்திராஷ்டமம்: நவ.20, 21 அதிர்ஷ்ட நாள்: நவ.29, 30
ரேவதி பேச்சின் இனிமை, சாதுர்யத்தால் செயல்கள் எளிதாக முடியும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில், வியாபாரத்தில் வருமானம் வழக்கம் போல் இருக்கும். பணியாளர்கள் எந்த ஒரு வேலையிலும் கவனத்துடன் ஈடுபடுவது நல்லது. குடும்பத்தினர்களை அனுசரித்து செல்வது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி சிந்தனை அதிகரிக்கும். பெண்களுக்கு எந்த காரியத்திலும் ஈடுபடும் முன்பு திட்டமிடுதல் அவசியம். பணவரவு தாமதப்படும். கலைத்துறையினருக்கு வீணான குழப்பங்கள் தேடி வர வாய்ப்பு இருக்கிறது. வீடு, நிலம், வாகனங்கள் வாங்க வாய்ப்புண்டு. அரசியல்வாதிகள் நல்ல பெயர் வாங்குவர். மூலதனத்திற்குத் தேவையான பணம் வந்து குவியும். எதிரிகள் வகையில் எச்சரிக்கை தேவை. மாணவர்களுக்கு சோம்பல் குணம் மாறும். அக்கறையுடன் படிப்பர். முயற்சிகள் வெற்றி பெறும். பரிகாரம்: ராமரை வணங்க குழப்பம் நீங்கி நன்மை உண்டாகும். சந்திராஷ்டமம்: நவ.21, 22 அதிர்ஷ்ட நாள்: நவ.30, டிச.1
மேலும்
பங்குனி ராசி பலன் (15.3.2025 முதல் 13.4.2025 வரை) »