பதிவு செய்த நாள்
17
நவ
2022
05:11
மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதியில் உள்ள சிவன் கோவில்களில் காலபைரவர் ஜெயந்தி விழா நடந்தது.
சிறுமுகை அடுத்த ஜடையம்பாளையம் ஊராட்சி ஆலாங்கொம்பில், நாகலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் சிவபெருமானின், 64வது அவதாரமாக காலபைரவர் ஜெயந்தி விழா நேற்று நடைபெற்றது. விழாவில் பழங்கள், கனிகள், பால், தயிர் உட்பட, 64 வகை திரவிய பொருட்களை கொண்டு, சுவாமிக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு, 7:00 மணிக்கு அலங்கார பூஜை நடந்தது. விழாவில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி முன்னாள் தலைவர் ராஜேஸ்வரி மற்றும் விழா குழுவினர், பக்தர்கள் ஆகியோர் பங்கேற்றனர். மேட்டுப்பாளையம் பஸ் ஸ்டாண்ட் அருகே, சக்தி விநாயகர் கோவிலில் காலபைரவர் சன்னதி உள்ளது. காலபைரவர் ஜெயந்தி விழாவை முன்னிட்டு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜை செய்யப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.