சித்தர் முத்துக்குமாரசுவாமி கோவிலில் கால்கோள் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
22நவ 2022 06:11
அவிநாசி: சேவூர் பத்ரகாளியம்மன், சித்தர் முத்துக்குமாரசுவாமி கோவிலில், டிசம்பர் 2-ஆம் தேதியன்று நடைபெறும் மஹா கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பந்தல் அமைக்கும் பணிக்கு, நேற்று கால்கோள் விழா நடைபெற்றது. அன்னை பத்ரகாளியம்மன், அருட்சித்தர் முத்துக்குமாரசுவாமி உள்ளிட்ட தெய்வங்கள் உறை கோவில் திருப்பணிகள் நிறைவு பெற்று பெருஞ்சாந்தி திருக்குட நீராட்டும் பெருவிழா எனும் மஹா கும்பாபிஷேக விழா டிசம்பர் 2ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு மேல் 7 மணிக்குள் நடைபெற உள்ளது. கும்பாபிஷேக விழாவையொட்டி, வேள்வி பூஜைகள் நடைபெற பந்தல் அமைக்கும் பணிக்கு கால்கோள் விழா நேற்று கோவில் வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருப்பணி குழுவினர், பக்தர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.