திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் கோவிலில் தெப்பத் திருவிழா விமரிசை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
23நவ 2022 07:11
திருவாலங்காடு: திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான வடாரண்யேஸ்வரர் கோவில் திருவாலங்காடில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று கார்த்திகை மாதம், சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு தெப்ப திருவிழா நடந்தது.
கொரோனா தொற்றுக்கு பின், மூன்றாண்டுகள் கழித்து நடந்த இந்த திருவிழாவில் சென்னை, காஞ்சி உட்பட பிற மாவட்டத்தில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபட்டனர். விழாவை ஒட்டி, காலை 10:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடந்தது. பின், மாலை 6:30 மணிக்கு கோவிலின் பின்புறம் அமைந்துள்ள ஆலங்காட்டு ஈஸ்வரர் சென்றாடு தீர்த்த குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் உற்சவர் வண்டார்குழலி அம்மனுடன் உடனுறை வடாரண்யேஸ்வரர் சுவாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். பின் சிறப்பு தீபாராதனை நடந்தது. அதை தொடர்ந்து, உற்சவ பெருமான் மூன்று முறை குளத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.நிகழ்ச்சியில் கோவில் தக்கார், ஜெயப்பிரியா, துணை ஆணையர் விஜயா உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.