சோமநாதபுரம் கேசவர் கோயிலில் சிற்பவேலைப்பாடு மிக்க நவரங்க மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் மேல்விதானத்தை காண்பவர் மனம் ஆச்சரியப்படும். கூம்பிய நிலையில் இருக்கும் வாழைப்பூவின் அரும்பு, பிஞ்சு, அரும்பு,மொட்டு, மடல் என்று அதன் வளர்ச்சி படிநிலைகள் சிற்பங்களாகச் செதுக்கப்பட்டுள்ளன. சரித்திர ஆய்வாளர்களின் கண்ணுக்கும், கருத்துக்கும் விருந்து அளிக்கும் விதத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.