திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் மலை மேல் டிச. 6ல் கார்த்திகை மஹா தீபம் ஏற்ற தீப கொப்பரை தயாராக வைக்கப்பட்டுள்ளது. மலை மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் மண்டபம் அருகிலுள்ள மண்டபத்தில் மூன்றரை அடி உயரம், இரண்டரை அடி அகலம் கொண்ட தாமிர கொப்பரையில் 300 லிட்டர் நெய், 100 மீட்டர் காடா துணியில் திரி தயாரித்து, ஐந்து கிலோ கற்பூரம் வைத்து கார்த்திகை மஹா தீபம் ஏற்றப்படும். அதற்கான தீபகொப்பரை நேற்று சுத்தம் செய்து கோயில் கம்பத்துடி மண்டபத்தில் வைக்கப்பட்டு பூஜை, தீபாராதனை நடத்தப்பட்டது.