வயதான பிறகு தான் ஆன்மிகம் என்ற கருத்து பலரிடமும் இருக்கிறது. நாடி, நரம்பெல்லாம் நன்றாக இருக்கிறபோதே நமக்கு பிடித்த தெய்வத்தின் நாமத்தை உச்சரித்து விட வேண்டும். நமசிவாய, சிவாயநம, சரவணபவ, கோவிந்தா, வெங்கட்ரமணா, ஓம் சக்தி என்று எத்தனையோ நாமங்கள் இறைவனுக்கு இருக்கின்றன. ஒருவர், வாழ்வின் இறுதிக்கட்டத்தில் இருந்தார். அந்த அந்திம நேரத்தில், கடவுளின் பெயரை சொன்னால் புண்ணியமே எனக்கருதி, அவரது மகனை முன்னால் நிறுத்தினர். அவன் பெயர் கோவிந்தன். அவருக்கு கண்கள் சுழன்று கொண்டுஇருந்தன. இவன் யார் தெரிகிறதா? என்றனர் உறவினர்கள். கோவிந்தன் என அவர் சொல்லியிருக்கலாம். இவனா! இவன் என் கடைசிப் பையன் என்றாராம். எனவே, இளமையிலேயே இறைவனின் திருநாமத்தைச் சொல்லுங்கள். இறுதிவாழ்க்கை இனிமையாக அமைய அது ஒன்றே வழி.