வத்சலன் என்றால் அருளக் கூடியவன் என்ற பொருள் மட்டுமல்ல. சுலபமாகக் கிடைக்கக் கூடியவன் என்றும் பொருளுண்டு. பக்தனுக்கு, இறைவன் சுலபமாகக் கிடைப்பான் என்பதால், பெருமாளுக்கு பக்தவத்சலன் என்று பெயர் வைத்தனர். பிரகலாதன், துருவன் போன்ற சிறுவர்கள் முதல் பிருகு, சுகப் பிரம்மர் போன்ற மகரிஷிகள் வரை யார் தன் மீது நிஜமான பக்தி செலுத்தினாலும் நேரில் வந்து விடக்கூடியவர் பெருமாள். இதனால் தான் அவர் பக்தவத்சலன் எனப்பட்டார்.