ராஜகோபால சுவாமி கோவிலில் ஸம்ப்ரோக்ஷண ஓராண்டு நிறைவு பூஜை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
01டிச 2022 11:12
கடலுார், புதுப்பாளையம் ராஜகோபால சுவாமி கோவில் ஸம்ப்ரோக்ஷணம் நடந்து, ஓராண்டு நிறைவு விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தது.
கடலுார் புதுப்பாளையத்தில் செங்கமலவல்லி தாயார் சமேத ராஜகோபால சுவாமி கோவில் அமைந்துள்ளது. இது, திவ்ய தேசங்களில் ஒன்றான திருவந்திபுரம் தேவநாத சுவாமிக்கு அபிமான ஸ்தலமாகும். இக்கோவிலுக்கு 17 ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு டிசம்பரில் ஸம்ப்ரோக்ஷணம் கோலாகலமாக நடந்தது. ஸம்ப்ரோக்ஷணம் நடந்து ஓராண்டு நிறைவையொட்டி, நேற்று கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. காலை 8:00 மணியளவில், உபயநாச்சியார் சமேத ராஜகோபால சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து, ஸ்ரீதேவி, பூதேவி சமேத ராஜகோபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இரவு, கோவிலுக்குள் பிரகார புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை, கோவில் உபயதாரர் துரைராஜ், கோமதி துரைராஜ் செய்திருந்தனர். செயல் அலுவலர் சரவணரூபன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.