சதுரகிரியில் சுவாமி தரிசனத்திற்கு அனுமதி; பக்தர்கள் எதிர்பார்ப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
04டிச 2022 12:12
ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலில் கார்த்திகை மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்கு சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் பவுர்ணமி, அமாவாசை வழிபாட்டிற்காக பிரதோஷ நாள் முதல் நான்கு நாட்கள் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய, மலையேற அனுமதிக்கப்படுவது வழக்கம். கடந்த இரண்டு மாதங்களாக பெய்த மழையின் காரணமாக பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தாணிப்பாறை மலை அடிவாரம் வரைக்கும் வந்து, சுவாமி தரிசனம் செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இந்நிலையில் நாளை டிசம்பர் 5ல் கார்த்திகை மாத பிரதோஷம், 7ல் பவுர்ணமியை முன்னிட்டு, தங்களை சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டுமென உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு நகரங்களைச் சேர்ந்த சதுரகிரி பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். பக்தர்களை அனுமதிப்பது குறித்து விருதுநகர், மதுரை மாவட்ட அரசு நிர்வாகம், வானிலை சூழ்நிலை உட்பட பல்வேறு நிலைமையை கருத்தில் கொண்டு முடிவு செய்யப்படும் என வனத்துறை தரப்பில் கூறப்படுகிறது.