பதிவு செய்த நாள்
06
டிச
2022
01:12
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவில் அருகே உள்ள ஸ்ரீ சிவந்தி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவையொட்டி நேற்று முன்தினம் பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட புனித தீர்த்தங்கள் நிறைந்த குடங்கள் கோவில் முன் அமைக்கப்பட்ட யாகசாலைக்கு கொண்டுவரப்பட்டது. தொடர்ந்து கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், நவகிரக ஹோமம், தனபூஜை பூர்ணாகுதி, தீபாகரனை, வாஸ்து சாந்தி, அங்குரார்ப்பனம், ரக்க்ஷாபந்தனம், கும்ப அலங்காரம், வேதஜபபாராயணம், மருந்து சாற்றுதல், நவரத்தின பஞ்சலோக எந்திர பிரதிஷ்டை , பூர்ணாவதி தீபாரனை உள்ளிட்ட பூஜைகள் நடந்தது . நேற்று புண்ணியாஹவாசனம்,பிம்மசுத்தி, நாடி சந்தானம், சதுர்த்வார பூஜை , வேதிகா அர்ச்சனை, மூல மந்திர ஹோமம் உள்ளிட்ட யாக வேள்வி பூஜைகளைத் தொடர்ந்து. மேளதாளம் முழங்க கடம் புறப்பாடு நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க கும்பங்களில் புனித நீர் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. பின் பக்தர்களுக்கு புனித நீரும், பூஜை மலர்களும் பிரசாதமாக வழங்கப்பட்டது. முன்னதாக பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் நத்தம் பேரூராட்சி தலைவர் சேக் கந்தர் பாட்சா, முன்னாள் பேரூராட்சி தலைவர் சிவலிங்கம், வர்த்தக சங்கத் தலைவர் ஷேக் ஒலி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.