பதிவு செய்த நாள்
31
ஆக
2012
10:08
ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் வடபத்ரசாயி கோயில், பவித்ர உற்சவம், கடந்த27ம் தேதி துவங்கியது. ஏழு நாட்கள் நடக்கும் விழாவில்,தினம் காலையில் பெருமாளுக்கு திருமஞ்சனம் , மஞ்சள் நூல் பவித்ர மாலை சார்த்தி, தீபாராதனை நடக்கிறது. தொடர்ந்து, திருவாய்மொழி பாடப்படுகிறது. முதல்நாளன்று, வேதபிரான் பட்டர் அனந்தராமனின் வீட்டிலிருந்து கோயிலுக்கு, மஞ்சள் மாலை கொண்டு செல்லப்பட்டு, பெருமாளுக்கு சார்த்தப்பட்டது. செப்.,2 மாலையில், வடபத்ரசாயி கருட வாகனத்திலும், பெரியாழ்வார் அன்னவாகனத்திலும் வீதியுலா நடக்கிறது. ஏற்பாடுகளை கோயில் தக்கார் ரவிச்சந்திரன் செய்து வருகிறார்.