பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில், மாதா பிறப்பையொட்டி கோமாதா பூஜை நடத்தது. இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பு நாளிலும் கோமாதா பூஜை நடப்பது வழக்கம். இதன்படி நேற்று காலை 6:00 மணிக்கு மார்கழி மாத துவக்க நாளில், பசு மாடு கன்றுடன் அலங்கரிக்கப்பட்டு, பெருமாள் சன்னதியில் சிறப்பு தீப ஆராதனைகள் நடந்தன. அப்போது ஏராளமான பக்தர்கள் கோமாதாவை வழிபட்டனர். தொடர்ந்து பசு கன்றுடன் கோயிலை வலம் வந்தபோது பக்தர்கள் பஜனைகள் பாடியபடி சென்றனர்.