சூலூர்: செலக்கரச்சலில் ஐயப்ப சுவாமி ஊர்வலத்தில் ஏராளமான பக்தர்கள் சரண் கோஷமிட்டு பங்கேற்றனர்.
செலக்கரச்சலில் உள்ள உள்ள ஸ்ரீ ஐயப்ப சுவாமி கோவில் பழமையானது. இங்குள்ள ஸ்ரீ தர்ம சாஸ்தா ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில், 21 ஆம் ஆண்டு விழா, 41ம் நாள் மண்டல பூஜை விழா நேற்று நடந்தது. அதிகாலை, 4:00 மணிக்கு, பெரிய விநாயகர் கோவிலில் சிறப்பு வழிபாட்டுடன் விழா துவங்கியது. தொடர்ந்து ஐயப்பன் கோவிலில் கணபதி ஹோமம் நடந்தது. மூலவர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, அலங்கார பூஜை நடந்தது. படி பூஜை முடிந்து மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து வள்ளி கும்மியாட்டம் நடந்தது. மாலை, அலங்கரிக்கப்பட்ட ஐயப்ப சுவாமி ஊர்வலம் நடந்தது. முக்கிய வீதிகள் வழியாக சென்ற ஊர்வலத்தில், ஏராளமான பக்தர்கள், சுவாமியே சரணம் ஐயப்பா என, சரண கோஷங்களை எழுப்பி பக்தி பரவசத்துடன் பங்கேற்றனர்.