காளஹஸ்தி சிவன் கோயில் கோபுரங்களில் செடிகளை அகற்ற கோரிக்கை
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
28டிச 2022 10:12
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் கோபுரங்களில் முளைத்திருக்கும் செடி கொடிகளை அகற்ற வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுக்கின்றனர் . ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் (கோயிலின் மேல் பகுதியில்) கொடிமரம் எதிரில் உள்ள ராஜகோபுரம் மீது செடிகள் மரங்களாக வளர்ந்து வருகின்றன என்றும் ஆனால் அதிகாரிகள் அதன் மீது கவனத்தை செலுத்தாமல் இருந்து வருகின்றனர் .இதே போல் கோபுரங்களில் பல வகையான செடிகள் வளர்ந்து இருப்பதால் கோபுரங்கள் சேதம் அடையும் அபாயம் இருப்பதாகவும் தெரிவித்தனர் .இதேபோல் கோயிலின் சுற்றுச் சுவர்களில் கொடிகள் மற்றும் செடிகள் அதிக அளவில் வளர்ந்து வருகின்றன. சமீபத்தில் பெய்த மழை காரணமாக கோயில் கோபுரங்கள் மற்றும் கோயில் சுவர்கள் என் அனைத்து பகுதிகளிலும் செடிகள் அதிகமாக காணப்படுகின்றன . இதனால் கோபுரங்களிலும் சுவர்களிலும் முளைத்திருக்கும் செடி கொடிகளை அகற்றாமல் போனால் கோயில் கோபுரங்களும் சுவர்களும் பழுதடையும் அபாயம் ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர் .இதனை தேவஸ்தான அதிகாரிகள் இனியாவது கவனத்தில் கொண்டு கோபுரங்களில் மற்றும் சுவர்களில் வளர்ந்து வரும் செடிகளை அகற்ற உடனடி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று (ஸ்ரீகாளஹஸ்தி) உள்ளூர் பக்தர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் கோயில் நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தனர்.