பதிவு செய்த நாள்
05
ஜன
2023
07:01
பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா நாளை நடக்கிறது.
கோவையின் புகழ்பெற்ற ஸ்தலங்களில் ஒன்றாக பேரூர் பட்டீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் மார்கழி திருவாதிரை திருவிழா ஆண்டுதோறும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும். இந்த ஆண்டு மார்கழி திருவாதிரை திருவிழா, கடந்த, 28ம் தேதி காப்பு கட்டுதலுடன் துவங்கியது. பத்து நாட்கள் நடக்கும் திருவிழாவில், முதல், 9 நாட்களும் காலையும், மாலையும், திருவெம்பாவை உற்சவம், மாணிக்கவாசகர் திருவீதி உலா நடந்தது. ஒன்பதாம் நாளான இன்று இரவு, கிளி வாகன சேவை, அன்னூஞ்சல் நடத்தப்பட்டு, சோமாஸ்கந்தர் திருவீதியுலா நடக்கிறது. அதனைத்தொடர்ந்து, நாளை, அதிகாலை, 3:30 மணிக்கு, நடைதிறக்கப்பட்டு, மார்கழி பூஜை செய்யப்பட்டு, 4:15 மணிக்கு, நடராஜ பெருமானுக்கு, 30 வகையான மங்கள திரவியங்கள் கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. காலை, 8:00 மணிக்கு, ஆருத்ரா தரிசன காட்சி நடக்கிறது. அதனைத்தொடர்ந்து காலை, 9:30 மணிக்கு, சுவாமி திருவீதியுலா நடக்கிறது.