Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மறையூர் அகஸ்தீஸ்வரர் கோவிலில் ... மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், ஆருத்ரா தரிசன விழா மதுக்கரை தர்மலிங்கேஸ்வரர் கோவிலில், ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிவாலயபுரம் சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் திருவாதிரை சிறப்பு வழிபாடு
எழுத்தின் அளவு:
சிவாலயபுரம் சங்கர லிங்கம் சுவாமி கோயிலில் திருவாதிரை சிறப்பு வழிபாடு

பதிவு செய்த நாள்

06 ஜன
2023
12:01

மதுரை : மேலூர் வட்டம், தும்பைப்பட்டி  சிவாலயபுரத்தில் எழுந்தருளி அருள்பாலித்து வரும் அருள்மிகு கோமதி அம்பிகை சமேத, சங்கர லிங்கம் சுவாமி, சங்கர நாராயணர் சுவாமி திருக்கோயிலில் மார்கழி மாதம்,  வரும் திருவாதிரை நட்சத்திரம்  சிறப்பு பூஜை வழிபாடு நடைபெற்றது.

நாட்டில் மக்கள் நோயற்ற வாழ்விற்கும், அமைதி தழைத்தோங்கவும்,  விவசாயம் செழித்தோங்கவும், மழை பெய்ய வேண்டியும், கொரோனா தொற்று நோயிலிருந்து மக்கள் விடுபடவும், சிறப்புப் பிரார்த்தனை நடைபெற்றது. காலை 4.30 மணிக்கு திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது.  அதனை தொடர்ந்து  காலை 06.00 மணிக்கு, அருள்மிகு சங்கரலிங்கம் சுவாமிக்கும், கோமதி அம்மனுக்கும் எண்ணெய் காப்பு சாற்றி, திரவியம்,  மஞ்சள்,  பஞ்சகவ்யம், பச்சரிசி மாவு, திருமஞ்சனம்,   பால்,  தயிர், இளநீர், கரும்பு சாறு, பழச்சாரு, பஞ்சாமிர்தம், தேன், ஸ்வர்ணம்,  சந்தனம், பன்னீர்,  திருநீர் போன்ற பதினாறு வகையான அபிக்ஷேகங்கள் நடைபெற்றது. சங்கர லிங்கம் சுவாமி, கோமதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தனர். சர்வ அலங்காரத்தில் நடராஜர் பெருமானும் சிவகாமி அம்பாளும் , சங்கு நாதம் முழங்க, தீப ஆராதனைகளுடன், பக்தர்கள் பாடல்கள் பாட  கோயிலை மூன்று முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்கள். இன்றைய இறைப் பணியில்  வஞ்சிநகரம் சிவ.பாண்டி - சிவ.ராஜி, சென்னகரம்பட்டி சிவ.ஸ்ரீனிவாசன் - சிவ.காளிதேவி, கோட்டப்பட்டி சிவ.சரவணன் - சிவ. சசிரேகா, மேலூர் சிவ.குருசாமி - சிவ. நாகராஜ், சுக்காம்பட்டி சிவ.ராஜேந்திரன், சிவ. சங்கர்,  குடும்பத்தினர் செய்திருந்தனர். பக்தர்கள் கோளாறு பதிகம், நந்தியம் பதிகம் சிவபுராணம், தேவாரம், திருவாசகம் பாராயணம் செய்தனர். பக்தர்களுக்கு  எலுமிச்சை சாதம், திருவாதிரை களி, அபிஷேக பால், பஞ்சாமிர்தம் பிரசாதம் வழங்கப்பட்டது. திருக்கோயில் அர்ச்சகர் ராஜேஷ் , சங்கர நாராயணர் கல்வி அன்னதான அறக்கட்டளை நிர்வாகிகள் கலந்து  கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளிப்பதற்காக மதுரை மாநகருக்குள், கண்டாங்கி பட்டுடுத்தி தங்க ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சாரங்கபாணி சுவாமி ... மேலும்
 
temple news
உத்தரகோசமங்கை: உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் உள்ள மங்களேஸ்வரி அம்மன் கோயில் சித்திரை ... மேலும்
 
temple news
திருப்பூர்: மங்கலம் அருகே உள்ள அக்ரஹாரப்புத்துார் ஸ்ரீபத்ரகாளியம்மன் கோவில் பொங்கல் விழா நேற்று ... மேலும்
 
temple news
சோழவந்தான்: தென்கரை மூலநாதசுவாமி கோயிலில் சித்திரை திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. இங்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar