ஸ்ரீரங்கத்தில் கடந்த வைகுண்ட ஏகாதசி உற்சவம் முழுவதும் பெருமாள் முன்னிலையிலே நடத்தப்பட்டது. தாயாருக்கு இந்த உற்சவத்தில் எவ்வித பங்கேற்பும் இல்லை.
ஸ்ரீரங்கம் கோயில் ரங்கநாயகித் தாயார் படிதாண்டா பத்தினி என்பதால், வைகுண்ட ஏகாதசி விழாவில் கலந்து கொண்டு ஆழ்வார்களின் தீந்தமிழ் பாசுரங்களை கேட்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்காமல் போனதற்கு அடியார்களின் கனவில் தோன்றி வருந்தினாராம். இதனையடுத்து பெருமாளுக்கு நடத்தியதைப் போல் தாயாருக்கு தனியாக 10நாள் திருவத்யயன உற்சவம் நடத்தும் பழக்கம் ஏற்பட்டது. இவ்வகையில் ரங்கநாயகித்தாயார் திருவத்யயன உற்சவம் 13.01.23ம் தேதி தொடங்கி வரும ஜனவரி 22ம் தேதி வரை நடக்கவுள்ளது. இதில் முதல் ஐந்து நாட்கள் பகல்பத்து திருமொழித் திருநாளாக நடைபெற உள்ளது.
இந்த நாட்களில் தினமும் மாலை 6 மணி முதல் 8.30 மணி வரை தாயார் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு பங்குனி உத்திர சேர்த்தி மண்டபத்தில் ஆஸ்தானமிருப்பார். அங்கு திருவாய்மொழி பாசுரங்களை அரையர்கள் பாடித் துவக்கி வைக்க அத்யாபகர்கள் தாயார் முன்னர் தொடர்ந்து சேவிப்பர். இரவு 9.00 மணிக்கு தாயார் அங்கிருந்து புறப்பட்டு, வீணை ஏகாந்தத்துடன் மூலஸ்தானம் சேருவார். ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி விழா நாட்களில் பெருமாள் தரிசன டிக்கெட் விற்பனை இந்த ஆண்டு புதிய இலக்கை எட்டியுள்ளது. இது பற்றி கோயில அலுவலக வட்டாரங்கள் தெரிவித்ததாது. வைகுந்த ஏகாதசி விழா 12.01.22 அன்று முடிவடைந்தது. இந்த விழாவின் போது பகல் பத்து, இராப்பத்து, சொர்க்கவாசல் திறப்பு நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இந்த காலங்களில் முத்தங்கி அலங்காரத்தில் இருக்கும் மூலவர் அரங்கநாதரை தரிசிக்க கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டிருந்தது. இந்த ஆண்டு மூலவர் தரிசன கட்டண சீட்டு 1 கோடியே 92 இலட்சத்து 93 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. ஸ்ரீரங்கம் கோயில் சமீபத்திய வரலாற்றில் இது புதிய உச்சம். இதற்கு முன் 2017ம் ஆண்டு கட்டண சீட்டு 1 கோடியே 48 லட்சத்து 28 ஆயிரத்து 460 ரூபாய் என்பது அதிக பட்சமாக இருந்தது குறிப்பிடதக்கது.