ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்களுக்கு தடை : ஜன., 31ல் வேலை நிறுத்தம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
27ஜன 2023 03:01
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோயிலில் உள்ளூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்யாதபடி தடுப்பு வேலி அமைத்ததை கண்டித்து ராமேஸ்வரம் மக்கள் பாதுகாப்பு பேரவை சார்பில் ஜன., 31ல் பொது வேலை நிறுத்தம் ஈடுபட உள்ளனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தர்களிடம் கட்டணம் வசூலிப்பதில் கோயில் அதிகாரிகள் குறிக்கோளாக செயல்பட்டு, ஆகம விதிகளை மீறி கிழக்கு ராஜகோபுரம் வழியாக பக்தர்களை அனுமதிக்காமல் பிரகாரங்களில் தடுப்பு வேலிகள் அமைத்தும், சில சன்னதிகளை மூடி உள்ளனர். இதனால் பக்தர்கள் பெரிதும் அவதிக்குள்ளாகியும், தினமும் கோயிலுக்கு வரும் உள்ளூர் பக்தர்கள் சுவாமி தரிசனம் முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதுகுறித்து நேற்று முன்தினம் நடந்த ராமேஸ்வரம் மக்கள் பாதுகாப்பு பேரவை கூட்டத்தில், கோவில் அதிகாரியின் தன்னிச்சை போக்கை கண்டித்து ஜன., 31ல் ராமேஸ்வரம் நகர் முழுவதும் பொது வேலை நிறுத்தம் செய்வது என தீர்மானித்தனர். இதில் அனைத்து அரசியல் கட்சி, ஹிந்து அமைப்பு நிர்வாகிகள், வியாபாரிகள், சமூக ஆர்வலர்கள் பலரும் பங்கேற்றனர்.