செஞ்சி: பிரசித்தி பெற்ற சிங்கவரம் ரங்கநாதர் கோவிலில் ரதசப்தமி விழா நடந்தது. செஞ்சியை அடுத்த சிங்கவரத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ரங்கநாதர் கோவிலில் நேற்று ரதசப்தமி விழா நடந்தது. இதை முன்னிட்டு காலை 6 மணிக்கு சூரிய பிரபை வாகனத்திலும், 8 மணிக்கு சேஷவாகனத்திலும், 10 மணிக்கு கருடவாகனத்திலும், 12 மணிக்கு குதிரை வாகனத்திலும், 1 மணிக்கு சிறப்பு அலங்காரத்திலும், 2 மணிக்கு அனுமந்த வாகனத்திலும், மாலை 4 மணிக்கு யானை வாகனத்திலும், 6 மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் மாட வீதிகள் வழியாக சாமி உலா நடந்தது. இதில் அமைச்சர் மஸ்தான், ஒன்றிய சேர்மன் விஜயகுமார் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் மற்றும் விழா குழுவினர் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.