மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழா : முட்டு தள்ளுதல் நிகழ்ச்சி
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2023 12:10
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தெப்பத்திருவிழாவை முன்னிட்டு மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டு தள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் தை தெப்பத்திருவிழா ஜன.24ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் நாளை பிப்.,4ல் நடைபெறுகிறது. விழாவை முன்னிட்டு மாரியம்மன் தெப்பக்குளத்தில் தெப்பம் முட்டு தள்ளுதல் நிகழ்ச்சி நடந்தது. வெள்ளி ரிஷப வாகனத்தில் பிரியாவிடையுடன் சுந்தரேஸ்வரர், அம்மன் அருள்பாலித்தனர். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். நாளை பிப்.4ல் தெப்பத்திருவிழா நடக்கிறது. காலை தெப்பக்குளத்தில் அமைக்கப்பட்டிருக்கும் தெப்பத்தில் அம்மனும் சுவாமியும் எழுந்தருளி குளத்தை சுற்றி வருவர். இரவ 8:00 மணிக்கு ஒருமுறை சுற்றி வருவர். அன்று காலை முதல் இரவு வரை மீனாட்சி அம்மன் கோயில் நடைசாத்தப்பட்டிருக்கும்.