காளஹஸ்தி பக்த கண்ணப்பர் கோயில் கொடி மரத்திற்கு பஞ்சலோக கவசம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
03பிப் 2023 10:02
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள பக்த கண்ணப்பர் மலை மீது வீற்றிருக்கும் பக்த கண்ணப்பர் கோயில் கொடி மரத்திற்கு பஞ்சலோக கவச உரைகளை ஸ்ரீ சிட்டி (தொழில் பட்டறை )நிர்வாக இயக்குனர் ரவி சன்னா ரெட்டி காணிக்கையாக வழங்கினார் .ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசலு கோரிக்கையின் பேரில் பக்த கண்ணப்பர் கொடி மரத்திற்கு பஞ்சலோகத்தில் தயார் செய்த கவச உரைகளை வழங்குவதற்காக ஸ்ரீ சிட்டி நிர்வாக இயக்குனர் ரவி சன்னா ரெட்டி முன்னுக்கு வந்தார். பக்த கண்ணப்பர் கொடி மரத்திற்கு எந்தவித கவசம் இல்லாததால் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரர் சிவன் கோயில் அறங்காவலர் குழு தலைவர் ஸ்ரீ சிட்டி நிர்வாக இயக்குனரை வேண்டுதலின் பேரில் அவர் பக்தி பாவத்துடன் கவசங்களை காணிக்கையாக வழங்க முன் வந்ததோடு பஞ்சலோகத்தினால் செய்த கவச உரைகளை தயார் செய்தார். இந்நிலையில் இன்று வெள்ளிக்கிழமை காலை ஸ்ரீகாளஹஸ்தி அறங்காவலர் குழு தலைவர் சீனிவாசலு முன்னிலையில் அதனை கோயிலுக்கு வழங்கினார். இவர்களுக்கு முன்னதாக கோயிலில் சிறப்பு தரிசன ஏற்பாடுகளை செய்தனர்.கோயிலில் ஸ்ரீ காலஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் சாமி தரிசனம் செய்தவருக்கு கோயில் சார்பில் சாமி படத்தை வழங்கியதோடு பொன்னாடை போர்த்தி கௌரவித்து சாமி அம்மையாரின் தீர்த்த பிரசாதங்களையும் வழங்கினார்.