Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முக்களத்தியம்மன் கோவிலில் ராகு கால ... வடபழனி ஆண்டவர் கோயிலில் தைப்பூச விழா கோலாகலம் வடபழனி ஆண்டவர் கோயிலில் தைப்பூச ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீர்காழி பத்திரகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா : பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
சீர்காழி பத்திரகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா : பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

04 பிப்
2023
10:02

மயிலாடுதுறை: சீர்காழி பத்திரகாளி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் காளிபுரம் என்ற புராண பெயர் உடைய சீர்காழியில் திரும்பும் திசையெல்லாம் காளியம்மன் கோவில்கள் இருப்பது சிறப்பு. இதில்  பிடாரி தெற்கு வீதியில் 500 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் தீமிதி உற்சவம் பத்து நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். இவ்வாண்டு தீமிதி உற்சவம் கடந்த  ஜனவரி 27 ஆம் தேதி காப்பு கட்டி, கொடியேற்றத்துடன் தொடங்கியது. 8ம் நாள் உற்சவமான தீமிதி திருவிழா இன்று இரவு வெகு விமர்சியாக நடைபெற்று, இதனை முன்னிட்டு காலையில் அய்யனார் கோவிலில் இருந்து 500-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் மற்றும் அலகு காவடி எடுத்து நான்கு வீதிகளையும் வலம் வந்தனர். பின்னர் பக்தர்கள் எடுத்து வந்த  பாலைக் கொண்டு பத்ரகாளியம்மனுக்கு அபிஷேகம் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து அம்பாளுக்கு பக்தர்கள் மாவிளக்கு போட்டு சிறப்பு வழிபாடு செய்தனர். தீமிதி திருவிழாவை முன்னிட்டுகீழத்தெரு பெப்சி பாய்ஸ் சார்பாக  வானவேடிக்கை நடத்தப்பட்டதுடன்,  அன்னதானமும் வழங்கப்பட்டது. தொடர்ந்து பச்சை காளி, பவள காளி திரு நடனத்துடன், சக்தி கரம் முன்னே செல்ல 500 க்கும் மேற்பட்ட பக்தர்கள் கோயிலில் முன் இருந்த தீ குண்டத்தில் இறங்கி தீ மிதித்து தங்கள் நேர்த்திக் கடனை செலுத்தினர். இவ்விழாவில்  ஏராளமானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: பிரசாந்தி நிலையத்தில், இன்று (நவ., 23) சத்ய சாய்பாபா பிறந்த நாள் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
அவிநாசி; கார்த்திகை மாத தேய்பிறை ஜென்மாஷ்டமி முன்னிட்டு கால பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கண்ணுக்கோடு பகவதி அம்மன் கோவில் ஆறாட்டு உற்சவம் வெகு விமர்சையாக நடைபெற்றது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார்சிவ சிவ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar