திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் தைப்பூச விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
05பிப் 2023 10:02
திருப்புத்தூர்: திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் வடக்கில் எழுந்தருளியுள்ள முருகன் சன்னதியில் நடந்த தைப்பூச பழனி பாதயாத்திரை விழா நேற்று அபிேஷகத்துடன் நிறைவடைந்தது.
குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் தைப்பூசவிழாவை முன்னிட்டு கார்த்திகை ஒன்றில் விரதம் துவக்கிய பக்தர்கள் சஷ்டி, கார்த்திகை மற்றும் செவ்வாய்கிழமைகளில் முருகனுக்கு அபிீேஷக, ஆராதனைகள் நடந்தன.அம்மன் சன்னதியில் திருவிளக்கு பூஜை, முருகனுக்கு 108 சங்காபிேஷகம், வெள்ளி வேலுக்கு சிறப்பு அபிேஷகம், பஞ்சாபமிர்த அபிேஷகம், ஜன.26 ல் சஷ்டியன்று திருவீதி உலாவும், ஜன.30 ல் தை கார்த்திகை சிறப்பு அபிேஹகமும் நடந்தது. நேற்று மாலை தை ப்பூசத்தை முன்னிட்ட சிறப்பு அபிேஷகம் நடந்து சர்வ அலங்காரத்தில் சுவாமியும் வள்ளிதெய்வானையும் அருள்பாலித்தனர். ஏற்பாட்டினை திருமுருகன் திருப்பேரவையினர் செய்தனர்.