சபரிமலை நடை 12ம் தேதி திறப்பு : ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08பிப் 2023 04:02
சபரிமலை: மாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை 12ம் தேதி திறக்கிறது,. 17ம் தேதி வரை பூஜைகள் நடைபெறும். 12ம் தேதி மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி ஜெயராமன் நம்பூதிரி நடை திறந்து தீபம் ஏற்றுவார். தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அன்று வேறு பூஜைகள் எதுவும் இல்லை. இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். 13–ம் தேதி அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்ததும் நெய்யபிேஷகம் உள்ளிட்ட பூஜைகள் தொடங்கும். தினமும் காலை 5:00 மணி முதல் பகல் ஒரு மணி வரையிலும். மாலை 5:00 மணி முதல் இரவு 10:00 மணி வரையிலும் நடை திறந்திருக்கும். 13 முதல் 17–ம் தேதி வரை தினமும் இரவு 7::00 மணிக்கு படிபூஜை நடைபெறும். 17–ம் தேதி இரவு 10:00 மணிக்கு நடை அடைக்கப்படும். தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு தற்போது நடைபெற்று வருகிறது.