பதிவு செய்த நாள்
09
பிப்
2023
09:02
பல்லடம்: பல்லடம் அருகே, ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
பல்லடம் அடுத்த, கணபதிபாளையம் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவிலில், குளிர்ச்சி விழா, மற்றும் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பிப்., 7 அன்றாட காலை 7.00 மணிக்கு, அம்மன் அழைத்தல் நிகழ்ச்சியுடன் விழா துவங்கியது. இரவு, 9.00 குளிர்ச்சி பந்தல் சென்றடைதல், பண்டரி பஜனை ஆகியவை நடந்தன. நேற்று அதிகாலை, 4.00 மணிக்கு கணபதி ஹோமமும் இதையடுத்து, 9.00 மணிக்கு பொங்கல் வைத்தல் நிகழ்வும் நடந்தது. தொடர்ந்து, மதியம் பெரிய பூஜை, மற்றும் இவர் அம்மன் ஆலயம் திரும்புதல் உள்ளிட்டவை நடந்தன. பொங்கல் விழாவை முன்னிட்டு, சிறப்பு அலங்காரத்தில் ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.