பதிவு செய்த நாள்
09
பிப்
2023
04:02
சூலூர்: தேவராயம்பாளையம் ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவிலில் திருக்கல்யாண உற்சவம் நடந்தது.
சூலூர் அடுத்த தேவராயம்பாளையத்தில் உள்ள, ஸ்ரீ ருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீ வேணுகோபால கிருஷ்ண சுவாமி கோவில், ஸ்ரீ பால விநாயகர், ஸ்ரீ பட்த்தரசி அம்மன், கருப்பராயன் மற்றும் கன்னிமார் கோவில் பழமையானவை. இங்கு மூன்றாம் ஆண்டு விழாவும், திருக்கல்யாண உற்சவமும் நடந்தது. கடந்த, 8 ம்தேதி மாலை விஸ்வக்சேன ஆராதனையுடன் திருக்ல்யாண உற்சவம் துவங்கியது. ஹோமம், மாங்கல்ய பூஜை முடிந்து, திருக்கல்யாணம் நடந்தது. கண்ணூஞ்சல் சாற்று முறை பூஜை நடந்தது. இதில், சுற்றுவட்டாரத்தை சேர்ந்த, ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர். மாலை, கலை வள்ளி கும்மி குழுவினரின் கும்மியாட்டம் நடந்தது. ஏராளமான பெண்கள், சிறுமிகள் உற்சாகமாக பங்கேற்று ஆடினர். அதிகாலை, 5:00 மணிக்கு, பால விநாயகர் கோவிலில் புனித நீர் கலசங்கள் வைக்கப்பட்டு, ஹோமம் நடந்தது. பின்னர், மேள, தாளத்துடன் கலசங்கள் அனைத்து கோவில்களுக்கும் எடுத்து செல்லப்பட்டு, அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் தெய்வங்கள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.