மாசி சிவராத்திரி விழா : ராமேஸ்வரம் கோயிலில் நாளை கொடி ஏற்றம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10பிப் 2023 11:02
ராமேஸ்வரம்: மாசி சிவராத்திரி விழா யொட்டி நாளை ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் திருவிழா கொடி ஏற்றப்பட உள்ளது.
மாசி சிவராத்திரி விழா யொட்டி ராமேஸ்வரம் திருக்கோயிலில் சுவாமி சன்னதி முன்புள்ள கொடி கம்பத்தில் காலை 10:30 மணிக்கு மேல் விழா கொடி ஏற்றப்பட உள்ளது. இதனைதொடர்ந்து முக்கிய விழாவான பிப்.,18ல் மாசி சிவராத்திரியான அன்று முழுவதும் கோயில் நடை திறக்கப்பட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம் நடக்கும். அன்றிரவு சுவாமி, அம்மன் அலங்காரித்த வெள்ளி தேரில் வீதி உலா வருவர். பிப்., 18ல் மாசி தேரோட்டம் வீதி உலா, பிப்., 20ல் மாசி அமாவாசை அன்று அக்னி தீர்த்த கடற்கரையில் சுவாமி, அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு தீர்த்த வாரி கொடுக்கும் நிகழ்ச்சி நடக்கும். தொடர்ந்து 12 நாட்கள் நடக்கும் மாசி மகா சிவராத்திரி விழாவில் தினமும் சுவாமி, அம்மன் தங்கம், வெள்ளி வாகனத்தில் வீதி உலா நடக்கும்