பதிவு செய்த நாள்
15
பிப்
2023
06:02
காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம், காளஹஸ்தி சிவன் கோயிலில் பிரம்மோற்சவ விழாவின் இன்று காலை காளஹஸ்தீஸ்வரர், கங்காபவனியுடன் புதன்கிழமை காலை சூர்யபிரபை வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
ஞானபிரசுனாம்பா தாயார் சப்பரத்தில் சுவாமியை பின் தொடர்ந்தார். பரமசிவன் சூர்யபிரபை வாகனத்தில் நான்கு மாட வீதிகளில் வலம் வரும்போத மூஷிக (எலி)வாகனத்தில் விநாயகசுவாமி, ஸ்ரீவள்ளி- தேவயானைவுடன் சுப்ரமணியசுவாமி, சண்டிகேஸ்வரர், பக்தகண்ணப்பருடன் சப்பரத்தில் சுவாமி அம்மவார்கள் எழுந்தருளினர். புதுக் குடைகள், மங்கள வாத்தியங்கள், மேள தாளங்கள், கோலாட்டங்கள், பஜனை வாத்தியங்கள் என பளிச்சிடும் வண்ண தோரணங்கள சாமி ஊர்வலத்தின் முன்னதாக அணிவகுத்துச் செல்ல சுவாமி, அம்மையாரின் ஊர்வலம் கோலாகலமாக நடந்தது. 4 மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பார்வதி பரமேஸ்வரரை ஏராளமான பக்தர்கள் பக்தர்கள் தரிசித்தனர். கற்பூர ஆரத்திகள் சமர்ப்பித்தும் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டு சிறப்பு பூஜைகளில் வீதிகளில் உள்ளூர் பக்தர்கள் ஈடுபட்டனர்.இதில் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசலு, செயல் அலுவலர் கே.வி.சாகர் பாபு, துணை நிர்வாக அதிகாரி என்.ஆர்.கிருஷ்ணா ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள் சிறப்பு அழைப்பாளர்கள் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.