பதிவு செய்த நாள்
16
பிப்
2023
07:02
காளஹஸ்தி: திருப்பதி, காளஹஸ்தீஸ்வரர் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தில் புதன்கிழமை இரவு உலகை காக்கும் சிவபெருமான், கங்காதேவியுடன் பூத வாகனத்தில் எழுந்தருளி ஞான பிரசுனாம்பிகை தாயார் கிளி வாகனத்தில் சுவாமியை பின் தொடர்ந்தார்.
தொடர்ந்து மூஷிக வாகனத்தில் விநாயக சுவாமியும், சப்பரத்தில் ஸ்ரீவள்ளி தேவயானை சமேத சுப்பிரமணியசுவாமி சண்டிகேஸ்வரர், பக்தகண்ணப்பர் ஆகிய பஞ்ச மூர்த்திகள் எழுந்தருளினர்.முன்னதாக கோயிலின் அலங்கார மண்டபத்தில் பஞ்சமூர்த்திகளுக்கு கோயில் அர்ச்சகர்கள் சிறப்பு அலங்காரம் செய்து சிறப்பு பூஜைகள் செய்தனர். தொடர்ந்து புதிய ராஜகோபுரம் வழியாக தேர் வீதியில் இருந்து நேரருவீதி, நகரிவீதி, பஜார்வீதி வழியாக சுவாமி, அம்மாயார்களின் ஊர்வலம் நடந்தது. சிவபெருமானும், பார்வதி தேவியும் பூத மற்றும் கிளி வாகனங்களில் வலம் வருவதை காண பக்தர்கள் நான்கு மாட வீதிகளில் . கற்பூர ஆரத்திகள் வழங்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன. நிகழ்ச்சியில் அறங்காவலர் குழுத் தலைவர் அஞ்சுரு தாரக சீனிவாசலு, செயல் அலுவலர் கே.வி.சாகர் பாபு, துணை நிர்வாக அதிகாரி என்.ஆர்.கிருஷ்ணா ரெட்டி, அறங்காவலர் குழு உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.