பதிவு செய்த நாள்
16
பிப்
2023
08:02
தொண்டாமுத்தூர்: கோவை ஈஷா யோகா மையத்தில், மஹா சிவராத்திரி விழாவையொட்டி, யக்ஷா கலைத்திருவிழா கோலாகலமாக துவங்கியது.
கோவை ஈஷா யோகா மையத்தில், வரும் 18ம் தேதி, மஹா சிவராத்திரி விழா பிரம்மாண்டமாக நடக்க உள்ளது. இதனையொட்டி, இந்திய பாரம்பரிய கலை வடிவங்களை ரசித்து உணர்வதற்காக நடத்தப்படும், யக்ஷா கலை திருவிழா, ஈஷா யோகா மையத்தில் உள்ள சூரிய குண்டம் மண்டபத்தில் நேற்று துவங்கியது. இந்நிகழ்ச்சியில், சங்கரா கண் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் டாக்டர் ரமணி குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தார். கலை திருவிழாவின் முதல் நாளான நேற்று, ஜெயதீர்த் மேவுண்டியின் ஹிந்துஸ்தானி இசை நிகழ்ச்சி நடந்தது. ஜெயதீர்த் மேவுண்டியின் அற்புதமான இசையில், அங்கிருந்தவர்கள் அனைவரும் மெய் மறந்தனர். இதில், ஏராளமான பார்வையாளர்கள் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைந்தனர். இரண்டாம் நாளான இன்று, பிரபல புல்லாங்குழல் இசைக்கலைஞர் சஷாங்க் சுப்ரமணியத்தின் இசை நிகழ்ச்சியும், நாளை, மாதவி முத்கல் குழுவினரின் ஒடிசி நடன நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.