பதிவு செய்த நாள்
16
பிப்
2023
10:02
தொண்டாமுத்தூர்: தமிழகத்தில், ஈஷா அறக்கட்டளை சார்பில், 32 இடங்களில் மஹா சிவராத்திரி விழா கொண்டாடப்படுகிறது. இதில், பொதுமக்களை இலவசமாக பங்கேற்கலாம் என, ஈஷா அறக்கட்டளையினர் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து ஈஷா அறக்கட்டளையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ஈஷா அறக்கட்டளை சார்பில், பாரத கலாச்சாரத்தின் மிக முக்கிய ஆன்மிக திருவிழாவான மஹா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் பிரம்மாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு வரும் 18ம் தேதி மாலை 6:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை, ஈஷா மஹா சிவராத்திரி விழா, கோவையில் உள்ள ஆதியோகி முன் நடக்கிறது. இதைத்தவிர, சென்னை, திருச்சி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், புதுச்சேரி, சேலம், நாமக்கல், திருவாரூர், நாகர்கோவில், வேலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கடலூர், திண்டுக்கல் உட்பட, 32 இடங்களில் இவ்விழா கொண்டாடப்பட உள்ளது. இந்நிகழ்ச்சி நடைபெறும் இடங்களை isha.co/msrtn-ta என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். கோவையில் நடைபெறும் மஹா சிவராத்திரி விழா, மற்ற எல்லா இடங்களிலும் பெரிய எல்.இ.டி., திரைகளில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.