மகா சிவராத்திரி விழா : ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் தங்க பல்லாக்கில் உலா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
18பிப் 2023 12:02
ராமேஸ்வரம்: மாசி சிவராத்திரி விழா யொட்டி ராமேஸ்வரம் கோயிலில் சுவாமி, அம்மன் தங்க பல்லக்கில் வீதி உலா வந்தனர்.
ராமேஸ்வரம் ராமேஸ்வரம் கோயிலில் மாசி சிவராத்திரி விழா பிப்.,11ல் கொடி ஏற்றத்துடன் துவங்கியது. 5ம் நாள் விழாவான நேற்று காலை 9 மணிக்கு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன் தங்க கேடயத்தில் எழுந்தருளினர். மாலை 5 மணிக்கு சுவாமி, பர்வதவர்த்தினி அம்மன், பிரியாவிடை அம்மன் தங்க பல்லக்கில் முத்தங்கி சேவையுடன் எழுந்தருளி, கோயில் ரத வீதியில் உலா வந்தனர். அப்போது வீதியெங்கும் கூடியிருந்த பக்தர்கள் பயபக்தியுடன் சுவாமி தரிசனம் செய்தனர். இன்று மாசி சிவராத்திரி யொட்டி கோயில் சுவாமி சன்னதியில் சிறப்பு அபிஷேகம், பூஜை நாள் முழுவதும் நடக்கும் என கோயில் அதிகாரி தெரிவித்தார்.