பதிவு செய்த நாள்
23
பிப்
2023
11:02
திருச்சி: ஸ்ரீரங்கம், அரங்கநாத சுவாமி கோயிலில் மாசி தெப்ப உற்சவம் துவங்கியது.
ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழாவில் நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. முதல் நாள் உற்சவத்தில் நம்பெருமாள், கிளிக்கூடு ரெங்கவிலாச மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
ஸ்ரீரங்கம் தெப்பத் திருவிழாவில் நேற்று முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. முதல் நாள் உற்சவத்தில் நம்பெருமாள், கிளிக்கூடு ரெங்கவிலாச மண்டபம் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். மாலை ஹம்ச வாகன புறப்பாடு நடைபெறுகிறது.
தெப்பத்திருவிழாவின் முதல் நாளான இன்று பிப்ரவரி 23ம் தேதி மாலை உற்சவர் நம்பெருமாள் ஹம்சவாகனத்திலும், 24ம் தேதி ஹனுமந்த வாகனத்திலும், 25ம் தேதி கற்பகவிருட்ச வாகனத்திலும், 26ம் தேதி வௌ்ளி கருட வாகனத்திலும், 27ம் தேதி இரட்டை பிரபை வாகனத்திலும், 28ம் தேதி இரவு 8 மணிக்கு யானை வாகனத்திலும் எழுந்தருளி உள் திருவீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். 7ம் திருநாளான மார்ச் 1ம் தேதி மாலை நம்பெருமாள் உபயநாச்சிமார்களுடன் சந்தனு மண்டபத்தில் இருந்து புறப்பட்டு நெல்லளவு கண்டருளி, உத்திர வீதிகளில் திருவீதி உலாவந்து இரவு 9மணிக்கு மூலஸ்தானம் சென்றடைகிறார். 8ம் நாளில் முக்கிய வைபமான தெப்பத் திருவிழா மார்ச் 2ம் தேதி நடைபெறகிறது. விழா ஏற்பாடுகளை திருக்கோயில் இணை ஆணையார் திரு.செ.மாரிமுத்து தலைமையில் அர்ச்சகர்கள் மற்றும் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.