பதிவு செய்த நாள்
23
பிப்
2023
03:02
கூடலூர்: கூடலூர், அருள்தரும் ஸ்ரீ சக்தி விநாயகர் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. 20ம் தேதி காலை 9:00 மணிக்கு சுங்கம் முனீஸ்வரன் கோவிலில் இருந்து, முளைப்பாரிகை, தீர்த்த குடங்கள் விநாயர் கோவிலுக்கு எடுத்து வரப்பட்டது. 21ம் தேதி காலை 6:00 மணி முதல் ஸ்ரீவிக்னேஸ்வரா பூஜை, ஹோமங்கள் நடந்தது. மாலை 6:00 மணிக்கு முதல் யாகசாலை பிரவேசம், முதற்கால யாகபூஜைகள், மகா தீபாரதனை நிகழ்ச்சிகள் நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு சிவாச்சாரியார் அன்மார்ந்த பூஜை வழிபாடு, இரண்டாம் கால யாக பூஜைகள நடந்தது. மாலை 6:00 மணிக்கு மூன்றாம் கால யாகசாலை த்வார பூஜைகள் நடந்தது. இரவு 10:00 மணிக்கு தங்கம், வெள்ளி, பஞ்சலோக, நவரத்ன யந்திரப்ரதிஷ்டை, அஷ்டபந்தன மருந்து சாத்தும் நிகழ்ச்சி நடந்தது. இன்று அதிகாலை 3:30 மணிக்கு நான்காம் காலயாக பூஜையும்: 6:00 மணிக்கு யாகசாலையில் இருந்து மூலாலயத்திற்கு கடங்கள் புறப்படும் நிகழ்ச்சியும்; 8:10 மணிக்கு கூனம்பட்டி கல்யாணபுரி ஆதீனம் 57வது ஜெகத்குரு ஸ்ரீமத் ராஜ சரவண மாணிக்கவாசக சுவாமிகள் தலைமையில், மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. தொடர்ந்து சிறப்பு அலங்கார வழிபாடும், மகா தீபாரதம் நிகழ்ச்சியும் நடந்தது.