பதிவு செய்த நாள்
23
பிப்
2023
03:02
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் தமிழக கவர்னர் ரவி மற்றும் அவரது குடும்பத்தினர் சாமி தரிசனம் செய்தனர். பொது தீட்சிதர்கள் சார்பில் கவர்னருக்கு வரவேற்பு அளித்து, பூர்ண கும்ப மரியாதை செலுத்தப்பட்டது.
கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் நடந்த நாட்டியாஞ்சலி விழாவில் பங்கேற்க வருகை தந்த தமிழக கவர்னர் ரவி காலை மனைவி லட்சுமி மற்றும் குடும்பத்தினருடன் நடராஜர் கோயிலுக்கு வருகை தந்தார், அவருக்கு கிழக்கு கோபுர வாயிலில், கோவில் பொதுதீட்சிசர்களின் செயலாளர் ஹோமசபேச தீட்சிதர் தலைமையில் தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து மேளதாளத்துடன் கோயிலுக்குள் அழைத்துச் சென்றனர். தொடர்ந்து கவர்னர் மற்றும் அவரது மனைவியும், கனகசபை மீதேறி சித்சபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமானை தரிசனம் செய்தனர். பொதுதீட்சிதர்கள் சிறப்பு அர்ச்சனை மற்றும் ஆராதனை செய்து பிரசாரத்தை வழங்கி, பொண்ணாடை அணிவித்து நடராஜர் படத்தை நினைவுப்பரிசாக வழங்கினர். பின்னர் தில்லைகோவிந்தராஜப் பெருமாளை தரிசித்தார் இதனையடுத்து கோயில் பொதுதீட்சிதர்கள் செயலாளர் அலுவலகத்திற்கு சென்று கோயில் பதிவேட்டில், தரிசனம் குறித்து. தனது குறிப்பை எழுதி பதிவு செய்தார்.
பின்னர் மீண்டும் 9:30 மணியளவில், சிதம்பரம் ஓமக்குளத்தில் உள்ள நந்தனார் மடத்திற்கு சுவர்னர் சென்றார் அங்கு நந்தனார் கல்விக்கழக துணைத் தலைவர் ஜெயச்சந்திரன், விநாயகமூர்த்தி, அன்பு, கலிவரதன் வினோபா ஈஸ்வர்லிங்கம் ஆகியோர் வரவேற்பு அளித்து கும்ப மரியாதை செய்தனர். மடத்தில் உள்ள சௌந்திரநாயகி சமேதக சிவலோகநாதாரை தரிசனம் செய்த கவர்னர். அங்குள்ள சுவாமி சகஜானந்தா சமாதியில் மலர் தூவியும், அவரது உருவச்சிலைக்கு மாலை அணிவித்தும் மரியாதை செலுத்தினார் அப்போது கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜாராம், உதவி ஆட்சியர் சுவேதா சுமன், உதவி காவல் கண்காணிப்பாளர் ரகுபதி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.